Posts

Image
  இரசனை யும்பிடித்த மும்யாவ ருக்குமொன்று  போலிலையென் றாலும் வணங்கு. தெளிவுரை: இரசனையும் பிடித்தமும் யாவருக்கும் ஒன்று போலில்லை என்றாலும் வணங்கு.
Image
  சாவுநோக்கி செல்லும்வாழ் வில்மக்கள்  நல்நினைவுக்  கேதேனும் நல்லதாய் செய். தெளிவுரை: சாவு நோக்கி செல்லும் வாழ்வில் மக்கள்   நல்நினைவுக்கு ஏதேனும் நல்லதாய் செய்.
Image
எவர்கைவிட் டாலுமெப்போ தும்கைவி டாதன்னம்                                          பிக்கையை கைவிடாதென் றுமிரு.  தெளிவுரை: எவர் கைவிட்டாலும் எப்போதும் கைவிடா  த ன்னம்பிக்கையை கைவிடாது என்றும் இரு .
Image
  கிடைப்பதை வீணின்றி சேமித்துசிக்க னம்தவறின் நீரின் றழியும் உலகு. தெளிவுரை: கிடைப்பதை வீணின்றி சேமித்து சிக்கனம் தவறின் நீரின்றி அழியும் உலகு.
Image
  செய்துபார்க்க உற்றுநோக்க உணரலாம் காணயெளி தாய்தோன் றுவதின் சிறப்பு. தெளிவுரை:  செய்து பார்க்க உற்று நோக்க உணரலாம் காண எளிதாய்த் தோன்றுவதின் சிறப்பு.
Image
  அறிவதெல் லாமறி வாகாசிந் தித்தத னுண்மை தெளிதல் அறிவு. தெளிவுரை: அறிவதெல்லாம் அறிவாகா; சிந்தித்து  அதன் உண்மை தெளிதல் அறிவு.
Image
  ஆயுதம் போருக்கு போடுதடை யஃதே யுலகயமை திக்கு விடை. தெளிவுரை: ஆயுதம் போருக்கு போடு தடை யஃதே  உலக அமைதிக்கு விடை.